தமிழ் சினிமாவின் முன்னணிப் பண்பாட்டுப் பேரணியில் இடம்பெறும் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ள ‘மதராஸி’ திரைப்படத்தில் தனது நடிப்பை முடித்துள்ளார். இந்த படம் எதிர்பார்ப்புக்கமைய, வருகிற செப்டம்பர் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இப்படத்திற்கு பிறகு, இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்கள். இந்த திரைப்படம் இந்தி மொழியிலும் தயாராகி வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் ஒரு கல்லூரி மாணவனாக நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்படும் என படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார். அந்த சந்திப்பு நிகழ்ந்த நேரத்தில் எடுத்த புகைப்படத்தை முதல்வர் பினராயி விஜயன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.