ரஜினி, சத்யராஜ், நடிகை சுலக்ஷனா, நடிகை மாதவி, நடிகர் செந்தாமரை உள்ளிட்டோர் நடித்து 80களில் பெரும் வெற்றி பெற்ற படம், தம்பிக்கு எந்த ஊரு.
இதன் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யமான ஒரு சம்பவம்.
அப்போது சத்யராஜை மாதவிக்கு தெரியாது. அவர் யார் என ரஜினியிடம் கேட்டார். உடனே ரஜினி,
“இவர், ஹாலிவுட் பிலிம் சிட்டியில் புரஃபஸராக இருக்கிறார், எப்படி கேமரா கோணத்தை வைக்க வேண்டும் என்பது இவருக்கு அத்துப்புடி.. அவர்தான் சொல்வார்..” என்று சீரியஸாக சொல்லிவிட்டார்.
இதை நம்பிய மாதவி, சத்யராஜிடம் சரளமாக ஆங்கிலத்தில் தனது சந்தேகங்களை கேட்க ஆரம்பித்துவிட்டார். சத்யராஜூக்கே அந்த அளவுக்கு ஆங்கிலம் தெரியாது. அதிர்ச்சி ஆகிவிட்டார்.
பிறகுதான் இது ரஜினியின் வேலை என்பது புரிந்தது, யூனிட்டே கலகலப்பாகியதாம்!