Touring Talkies
100% Cinema

Monday, October 20, 2025

Touring Talkies

காந்தாரா 2 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரிஷப் ஷெட்டி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்து கடந்த இரண்டாம் தேதி திரைக்கு வந்த படம் ‘காந்தாரா சாப்டர் 1’. ருக்மணி வசந்த் நாயாகியாக நடித்த இந்த படம் இதுவரை 760 கோடி ரூபாய் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரிஷப் ஷெட்டி ஆன்மிக பயணம் மேற்கொண்டு வருகிறார்.

கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டி மலையிலிருந்து தனது ஆன்மிக பயணத்தை துவங்கி, சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து நன்றியைத் தெரிவித்தார். பின்னர் நஞ்சனகுடு ஸ்ரீகண்டேஸ்வரர் கோவில் மற்றும் ‘தக்ஷன காசி’ என அழைக்கப்படும் தலத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தார்.

இதனைத் தொடர்ந்து, புனித நகரங்களில் ஒன்றான காசி (வாரணாசி) செல்லும் பயணத்தில், கங்கா ஆரத்தியில் பங்கேற்று காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தார். தற்போது அவர் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார். அவரது ஆன்மிக பயணத்தில் இன்னும் சில முக்கிய கோவில்கள் குறித்த பயணங்கள் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News