Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

பிரஜன் – பிரகயா நயன் நடிக்கும் அரசியல் கலந்த திரில்லர் படம் பூஜையுடன் துவங்கியது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஸ்ரீகிருஷ்ணா பிலிம் புரொடக்சன்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் S.V.சூரியகாந்த் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் பிரஜன் நாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக ஆஜீத் நாயக் அறிமுகமாகிறார்.

கதாநாயகிகளாக பிரகயா நயன், ரஷ்மி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ராஜ்கபூர், பருத்தி வீரன்’ சுஜாதா, ஷோபராஜ் மற்றும் இன்னும் எராளமான நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – வினோத் குமார், இசை – விஜய் யாட்லீ, பாடல்கள் – கென்னடி, மக்கள் தொடர்பு – மணவை புவன், இணை தயாரிப்பு – சித்தார்த்தா, தயாரிப்பு – S.V.சூரியகாந்த்.

கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார்கள் இரட்டையர் இயக்குநர்களான சங்கர் மற்றும் கென்னடி.

படம் பற்றி  இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் கென்னடி இருவரும் பேசும்போது, “இதுவொரு அரசியல் கலந்த கிரைம் திரில்லர் கதையின் அடிப்படையில் உருவாகும் திரைப்படம். தவறான அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தால்  சாமானிய மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்ற முக்கியமான விஷயத்தை இதில் சொல்ல இருக்கிறோம்.

இணை பிரியாத இரண்டு நண்பர்கள் ஒரு அரசியல் வாதியின் சூழ்ச்சியில் சிக்குகிறார்கள். அதிலிருந்து எப்படி மீண்டார்கள்..? இறுதியில் அவர்களது நட்பு என்னவானது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.

நட்பின் ஆழத்தை இதுவரை யாரும் சொல்லிறாத ஒரு வித்தியாசமான கோணத்தில் இந்தப் படத்தில் சொல்கிறோம். நிச்சயம் இந்த படம் வெளியான பிறகு படம் பார்கும் ஒவ்வொருவருக்கும் நமக்கு இப்படியொரு நட்பு கிடைக்கவில்லையே என்று ஏங்குவார்கள்…” என்றார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தர்மபுரியில் பூஜையுடன் துவக்கியுள்ளது. தொடர்ந்து தர்மபுரி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

- Advertisement -

Read more

Local News