சக நடிகர்கள் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் விஜயகாந்த் செய்த உதவிகள் சம்பவங்கள் குறித்து பலரும் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பொன்னம்பலம் தனது தங்கை திருமணத்திற்கு விஜயகாந்த் செய்த உதவி குறித்து பேசியுள்ளார்.
“எனது 2-வது தங்கையின் திருமணம். ஆனால் எனக்கு ஷூட்டிங் நடக்க 3 மாதங்கள் இருகிறது. கையில் பணம் இல்லை. அப்போது விஜயகாந்த் சார் என்னை அழைத்து தங்கை கல்யாணம் எப்போ என்று கேட்டார். வரும் 19-ந் தேதி இன்னும் 3 நாட்கள் தான் இருக்கிறது என்று சொன்னேன். அதற்கு அவர் பணத்துக்கு என்னடா பண்ணபோற என்று கேட்டுவிட்டு ஒரு ஐடியா சொன்னார். உனக்கு 3 மாதம் கழித்துதான் என்னுடன் சோலோ ஃபைட், இந்த ஃபைட் காட்சியை நாளைக்கே எடுத்துவிடலாம் என்று சொல்லி எடுத்தார்.
மறுநாள் என் தங்கைக்கு கல்யாணம் முன்னாடி நாள் இரவு நானும் விஜயகாந்த் சாரும் ஃபைட் பண்றோம். பகலில் வேறு ஷூட்டிங்கில் இருந்த அவர் நைட் என்னுடன் ஃபைட் பண்ணுகிறார். விடியற்காலை ஷூட்டிங் முடிந்தது. நான் போய் குளித்துவிட்டு வருவதற்குள் விஜயகாந்த் மண்டபத்திற்கு வந்துவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் அந்த ஃபைட் காட்சிக்கான எனது சம்பளம் ரூ50 ஆயிரத்தை எடுத்து வந்தார். அதை வைத்து எனது தங்கை திருமணத்தை நடத்தினேன்” என்று கூறியுள்ளார்.