புன்னகை அரசி என்று போற்றப்பட்டவர் கே.ஆர். விஜயா என்றால், புன்னகை இளவரசி என கொண்டாடப்படுபவர் சிநேகா. அந்த அழவுக்கு அவரது இயல்பான அழகு அனைவரையும் கவரும். அதே போல நடிப்பிலும் சிறந்தவர்.
ஆனால் அவரோடு நடிக்க முடியாது என ஒரு ஹீரோ சொன்னதும் நடந்தது.
இது குறித்து, பிரபல புகைப்பட கலைஞரான சுரேஷ் மெர்லின் ஒரு பேட்டியில் கூறினார்.
“மாதவன் நடித்த ‘அலைபாயுதே’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அடுத்து தனது நண்பரான இயக்குனர் ஜே.சுரேஷின் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்தார்.
இந்த நிலையில் இயக்குநர் ஜே.சுரேஷ் என்னிடம் புதுமுக நடிகை வேண்டும் என்றார். நான்
அவரிடம், சினேகாவின் புகைப்படத்தை காட்டினேன்.
அவருக்கு பிடித்துவிட்டது. அந்த படத்தை மாதவனிடம் அவர் காண்பித்தார். அவரோ, ‘இவர் எனக்கு செட் ஆக மாட்டார். தவிர பிரபலமான நடிகையை புக் செய்யுங்கள்’ என்றார்.
ஆனாலும் இயக்குனர் சுரேஷ் வற்புறுத்தினார். இதனால் இருவருக்கிடையே பெரும் வாக்குவாதமே நடந்தது. பிறகு ஒருவழியாக மாதவனை சம்மதிக்க வைத்தார். இப்படித்தான், ‘என்னவளே திரைப்படத்தில் மாதவுடன் சினேகா நடித்தார்” என்றார் புகைப்பட கலைஞர் சுரேஷ் மெர்லின் .