தமிழ் திரையுலகில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடித்துள்ள புதிய திரைப்படம் “டீசல்”, சண்முகம் முத்துச்சாமி இயக்கத்தில் உருவாகியுள்ளது.

இப்படத்தில் அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹரிஷ் கல்யாணின் திரைப்படக் கரியரில் இதுவரை அதிக பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்த “டீசல்” படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை அதுல்யா ரவி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் “டீசல்” திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கில் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.