பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப்பச்சன், 2024 – 25 நிதியாண்டில் சுமார் ₹350 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். அதற்கான வரியாக ₹120 கோடி செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கடைசி கட்டமாக ₹52 கோடி வருமான வரியாக கட்டியுள்ளார்.

அவரது வருமானம் சினிமா, விளம்பரங்கள், மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் வருகிறது. கடந்த காலங்களில் இந்திய திரையுலகில் பல நடிகர்கள் வருமான வரியை உடனடியாக செலுத்தாமல் பாக்கி வைத்திருப்பது வழக்கமாக இருந்தது.
அந்த காலங்களில் நிதியாண்டு முடிந்த பின், வருமான வரித்துறை மிகப்பெரிய பட்டியலை வெளியிடுவதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், தற்போது பெரும்பாலான நடிகர்கள் வருமான வரியை முறையாக செலுத்தி வருகின்றனர். சிலரே மட்டும் வரி கட்டாமல் வைத்திருப்பதாகத் தகவல். இந்திய அளவில் 2024 – 25 ஆம் ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகராக அல்லு அர்ஜுன் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து, விஜய், ஷாரூக்கான், ரஜினிகாந்த், ஆமீர்கான், பிரபாஸ், அஜித், சல்மான்கான், கமல்ஹாசன் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.