ஹீரோ எடுத்த அதிரடி முடிவு..!

தெலுங்கு திரையுலகின் சுப்ரீம் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி. இவரின் மகனான ராம் சரணும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவர்.

சிறுத்தை  என்ற தெலுங்கு படம் வாயிலாக கடந்த 2007-ம் ஆண்டு அறிமுகமான இவர், மகதீரா, ஆர்.ஆர்.ஆர். போன்ற படங்களில் நடித்தது முக்கிய நடிகராக உருவாகி உள்ளார்.

இவருக்கு கடந்த 2012-ம் ஆண்டு உபாசனா திருமணம் நடைபெற்றது. உபாசனா  தொழிலதிபர் மட்டுமல்ல..  சமூக ஆர்வலரும் கூட..

இவரிடம், “திருமணம் ஆகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் குழந்தைகள் இல்லையே” என்று கேட்டால்..

“நானோ என் கணவரோ குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கவில்லை.  மக்கள் தொகை கட்டுப்பாட்டை மனதில் வைத்தே இந்த முடிவை எடுத்தோம்” என்று கூறி ஆச்சரியப்பட வைக்கிறார்.