சுந்தர்.சி இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோர் இணைந்து நடித்த கலகலப்பு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பின்னர், 2018ஆம் ஆண்டு சுந்தர்.சி ஜீவா, ஜெய் ஆகியோர் நடிப்பில் கலகலப்பு 2படத்தை இயக்கினார். இப்படம் விமர்சன ரீதியாக சற்று கலவையான கருத்துக்களை பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றியைச் செய்தது.

சமீபத்தில் சுந்தர்.சி கலகலப்பு 3 படத்தை இயக்கத் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் சில காரணங்களால், சுந்தர்.சி தற்போது வடிவேலுவுடன் கேங்கர்ஸ் படத்தை இயக்கி வருகிறார். இதைத் தொடர்ந்து, நயன்தாராவுடன் மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்த படங்களை முடித்த பிறகு தான் கலகலப்பு 3 படத்தின் பணிகளை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் மீண்டும் விமல் நடித்துக் கொண்டிருப்பதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் விமல் உறுதியாக தெரிவித்துள்ளார்.தற்போது நடிகர் விமல் சார் என்ற படத்தில் போஸ் வெங்கட் இயக்கத்தில் நடித்துள்ளார் இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.