Touring Talkies
100% Cinema

Friday, September 12, 2025

Touring Talkies

ஐந்து மடங்கு வசூலித்த திரைப்படம்.. எதுதெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இப்போது , படத்தின் பட்ஜெட்டைவிட, இரண்டு மடங்கு, மூன்று மடங்கு வசூல் ஆனது என பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள்.

ஆனால் 82 வருடங்களுக்கு முன்பே, ஒரு திரைப்படம், பட்ஜெட் செலவைவிட ஐந்தரை மடங்குக்கு மேல் வசூல் செய்து பெரிய அளவில் ஹிட் ஆகி இருக்கிறது.

இது குறித்த தகவலை டூரிங்  டாக்கீஸ் யு டியுப் சேனலில், சித்ரா லட்சுமணன் பகிர்ந்துகொண்டார்:

“1941ல் வெளியானது சபாபதி என்ற திரைப்படம்தான், ஐந்தரை மடங்கு வசூல் சாதனையை செய்தது. டி.ஆர். ராமசந்திரன் நாயகனாக நடித்தார்.மேலும் காளி என். ரத்னம், டி. ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் தோன்றினர்.

ஏ.வி.மெய்யப்பன் தயாரித்தார். அதோடு, ஏ. டி. கிருஷ்ணசாமியுடன்  இணைந்து தயாரிக்கவும் செய்தார்.

இத்திரைப்படத்தை  32,000 ரூபாய் செலவில் எடுத்தனர். வசூல்,1,80,000 ரூபாய்.

நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா… நாயகன் டி.ஆர். ராமசந்திரனுக்கு ரூ.67.50 மாதச் சம்பளம். நாயகிக்கு 45 ரூபாய்!” என்ற தகவலைத் தெரிவித்தார் சித்ரா லட்சுமணன்.

குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க…  டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..

- Advertisement -

Read more

Local News