‘கார்த்திகேயா’ படத்தின் இயக்குனர் சன்டோ மோன்டீடி, நடிகர் நாக சைதன்யாவை வைத்து ‘தண்டேல்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மீனவர்கள் சமூகத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் பிப்ரவரி 7ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், தற்போது இப்படத்தை தமிழகத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.