ஷாருக்கானின் ஜவான் மற்றும் அமீர் கானின் தாரே ஜமீன் பர் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அங்கீகாரம் பெற்ற நடிகை கிரிஜா, சமீபத்தில் அளித்த பேட்டி பரவலாகப் பேசப்பட்டு, ஒரு கணத்தில் தேசிய அளவில் பிரபலமானார். இதனிடையே, திரைப்படங்களில் வரும் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது குறித்து அவர் திறந்த மனதுடன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒரு நேர்காணலில், கிரிஜாவிடம் “முத்தக் காட்சி போன்ற நெருக்கமான காட்சிகளில் நடிக்க மனதளவில் உங்களை எப்படி தயார் செய்கிறீர்கள்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதே கேள்வியை பலரும் என்னிடம் கேட்டுள்ளனர். என் பதில் எப்போதும் ஒன்றுதான், அது ஒரு காகிதத் துண்டை முத்தமிடுவது போன்றதே. எந்த உணர்ச்சியும் இருப்பதில்லை.
சில நேரங்களில் நெருக்கமான காட்சிகளை படமாக்கும்போது, எதிரே நடிகர் கூட நிற்பதில்லை. சில நேரங்களில் கேமரா ஸ்டாண்ட் அல்லது லைட்டிங்கிற்கு பயன்படுத்தப்படும் கருப்பு துணியை நோக்கி காதல் வசனங்களைச் சொல்ல வேண்டி வரும். இப்படியாக பல முறை நான் காட்சிகளில் பேசிச்செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

