இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை பிரபல கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து தற்போது கடைசிக் கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு, இப்படம் ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் இப்படத்தை தொடர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளதால், இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, இப்படத்தில் இருந்து ‘தளபதி கச்சேரி’ என்ற முதல்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. பாடல் வரிகளை அறிவு எழுதியுள்ளார். இந்த பாடலை விஜய், அனிருத், மற்றும் அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் அதிரடி பாடலாக வெளிவந்துள்ளது தளபதி கச்சேரி பாடல். மிகப்பெரிய நடனக் கலைஞர்கள் பட்டாளத்துடன் விஜய் இந்த பாடலில் நடனமாடியுள்ளார். தற்போது இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

