மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தமிழில் ‘கர்ணன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் கார்த்தி நடித்த ‘சர்தார்’ படத்திலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ படத்தில் துருவ் விக்ரமின் அக்காவாக நடித்துள்ளார்.

இதைப் பற்றி ரஜிஷா விஜயன் கூறியதாவது, “கர்ணன் படத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் என்னை அழைக்கவில்லை. பின்னர் ‘பைசன்’ படத்திற்காக மாரி செல்வராஜ் அழைத்தபோது, ஹீரோவின் அக்காவாக நடிக்க முடியுமா என தயக்கத்துடன் கேட்டார். ஆனால் நான் அக்கா, தங்கை, அம்மா எது வேண்டுமானாலும் நடிப்பேன் என்று கூறினேன்.
இந்தப் படத்துக்காக மீண்டும் திருநெல்வேலிக்குச் சென்றேன். நான் மலையாளி என்றாலும், அங்குள்ள மக்களின் அன்பால் அந்த ஊருக்கே சொந்தமானவளாக மாறிவிட்டேன். ஒரு காட்சியில் நீச்சல் தெரியாமல் குளத்தில் தத்தளித்தபோது, இயக்குநர் மாரி செல்வராஜ் உடனே கூலிங் கிளாஸ் போட்டபடியே குதித்து என்னை காப்பாற்றினார்,” என்று அவர் தெரிவித்தார்.