ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் அண்மையில் வெளியான ப்ளாக்மெயில் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே போன்ற படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார். மேலும், ஸ்ரீகாந்த் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், 75வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டும் விதமாக ஜி.வி. பிரகாஷ்குமார் ஏழை தாயின் மகன் என்ற பாடலை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இசையமைப்பாளராகவும், பெருமைமிகு இந்திய தேசத்தின் குடிமகனாகவும், 140 கோடி மக்களின் பாதுகாவலருமான எனது பிரதமர் அவர்களின் பிறந்த நாளுக்கு மக்களின் சார்பாக இந்த அன்புப் பரிசை இசை வடிவில் வழங்குவதில் பெருமை அடைகிறேன். நீண்ட ஆயுளுடன் மக்கள் சேவையில் தொடர்ந்து ஈடுபட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.