சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படத்துக்கு ‘நூறுசாமி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தில் லப்பர் பந்து சுவாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை லிஜோமோலும் இதில் முக்கிய வேடத்தில் உள்ளார். 2016 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்த படம் தெலுங்கிலும் நல்ல வசூலை பெற்றது. பின்னர் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதன் பின்பு பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி இயக்கியும் நடித்தும், அதுவும் வெற்றியை பெற்றது.

இப்போது மீண்டும் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கிறார். இந்தப்படத்திற்கு ‘நூறுசாமி’ என பெயரிடப்பட்டுள்ளது. இது பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்ற ஒரு பிரபலமான பாடலின் தொடக்க வரி ஆகும்.
இதனால், இது பிச்சைக்காரன் மூன்றாம் பாகமா அல்லது அந்தக் கதையுடன் தொடர்புடைய படமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிச்சைக்காரன், பிச்சைக்காரன் 2 படங்களை விட பல மடங்கு பெரிய பட்ஜெட்டில் நூறுசாமி உருவாகி வருகிறது. இன்று இயக்குநர் சசியின் பிறந்தநாள் என்பதால் இந்தப்படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.