தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு நிச்சயமாக 50வது ஆண்டு பாராட்டு விழா நடத்த வேண்டும். கேப்டன் இன்று இருந்திருந்தால் கண்டிப்பாக ரஜினிகாந்த்திற்கு 50வது ஆண்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தியிருப்பார். திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு கேப்டன் சார்பாகவும், என் சார்பாகவும் மற்றும் தேமுதிக தொண்டர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றுள்ளார்.
