தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் பிட்னஸில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அரவிந்த சமேத வீரராகவ படத்தில் இருந்து ஒவ்வொரு படத்திலும் தனது கெட்டப்பை மாற்றி நடித்து வருகிறார். அப்படத்தில் இடம் பெற்ற ஒரு அதிரடியான ஆக்சன் கட்சியில் முதல் முறையாக சிக்ஸ் பேக் உடல் கட்டுக்கு மாறி நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார். அதன்பிறகு சில படங்களில் சிக்ஸ்பேக் வைத்திருந்த ஜூனியர் என்டிஆர், தற்போது ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து நடித்திருக்கும் வார் 2 படத்தில் மீண்டும் சிக்ஸ்பேக் கெட்டப்புக்கு மாறி நடித்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் டிரெண்டிங் செய்து வருகிறார்கள்.
