கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார். இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள 131வது திரைப்படம் அறிவிப்பு போஸ்டர் வெளியானது. தமிழில் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ என்ற படத்தை இயக்கிய கார்த்திக் அத்வைத் இந்த படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளராக சாம்.சி.எஸ் பணியாற்றுகிறார். இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் விரைவில் நடைபெற உள்ளன. தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில், சிவராஜ்குமார் துப்பாக்கி ஒன்றை தயாரிப்பதைப் போல் காட்சியளிக்கிறார், பின்னணியில் நிறைய துப்பாக்கிகள் காணப்படுகின்றன.
இதையடுத்து, படம் ஒரு அதிரடியான ஆக்ஷன் படமாகவும், கேங்ஸ்டர் அல்லது போலீஸ் கதைக்களத்தில் உருவாகக்கூடும் என்று கூறப்படுகிறது.