Touring Talkies
100% Cinema

Monday, May 19, 2025

Touring Talkies

என் குடும்பத்தால் எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய மனவருத்தம் – நடிகை லிஜோ மோல் ஜோஸ்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பஹத் பாசில் நடித்த ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ திரைப்படத்தில் துணை நடிகையாக அறிமுகமானவர் லிஜோ மோல் ஜோஸ். பின்னர் தமிழில் ‘ஜெய்பீம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாராட்டைப் பெற்ற அவர், தற்போது பல திரைப்படங்களில் முக்கிய கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் திருமணமும் நடைபெற்றது. இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் தனது தாயின் இரண்டாவது திருமணம் தன் வாழ்க்கையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்து உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியுள்ளார்.

“நான் ஒன்றரை வயதில் இருந்தபோதே என் தந்தை இறந்துவிட்டார். அப்போது என் தாய் மூன்று மாத கர்ப்பமாக இருந்தார். எனவே என் சிறுவயதில் ‘தந்தை’ என அழைக்கும் ஒருவர் எனக்கு கிடையாது. எனக்கு பத்து வயதாகும் போது, என் தாய் ஒருவரை அழைத்து வந்து, ‘இனிமேல் இவர்தான் உன் தந்தை’ என்று கூறினார். ஆனால் என் மனம் அதை ஏற்கவில்லை. ஏற்கனவே எனக்கும் என் அம்மாவுக்கும் ஒரு பிளவு இருந்தது. வளர்ப்பு தந்தை வந்த பிறகு அந்த இடைவெளி மேலும் அதிகமாகியது. அதனால் நான் என் சித்தியுடன் அதிகமாகக் கூடி இருந்தேன். பின்னர் சித்தியையும் பிரிந்து தனியாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அம்மாவிடம் மனதை திறந்து பேச முடியாத நிலை ஏற்பட்டது. ஏனெனில் என்னைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு விஷயமும் வளர்ப்பு தந்தைக்குத் தெரியவிடும் என்ற பயம் இருந்தது. அம்மா என்னைப் பற்றிக் கவலைப்பட்டாலும், அது முழுமையான பாசமாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால், கல்லூரி முடித்து விட்ட பிறகு தான் என் அம்மா இரண்டாவது திருமணம் செய்துகொண்டது எதற்காக என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அவர்களுக்கே தனியாக ஒரு பிள்ளையை பெற்றுக்கொள்ளவில்லை என்பதை உணர்ந்த பிறகு, என் அம்மாவையும் வளர்ப்பு தந்தையையும் பார்த்த பார்வை மாறியது” என்று உணர்ச்சிகரமாகப் பேசியுள்ளார் லிஜோ மோல் ஜோஸ்.

- Advertisement -

Read more

Local News