நயன்தாரா தற்போது டாக்ஸிக், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடன்ட்ஸ், மூக்குத்தி அம்மன் 2, ராக்காயி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கும் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க அழைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தில் நடிக்க நயன்தாரா 18 கோடி ரூபாய் சம்பளம் கேட்டள்ளதாக டோலிவுட் தகவல்கள் கூறுகின்றன. தற்போது இப்படத்தின் ஆரம்ப பணிகள் தொடங்கியுள்ள நிலையில், 2026ம் ஆண்டு சங்கராந்தி விழாவை முன்னிட்டு இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
மேலும், இந்தப் படத்தில் நயன்தாரா இணைந்தால், இது சைரா நரசிம்மரெட்டி மற்றும் காட்பாதர் படங்களுக்குப் பிறகு சிரஞ்சீவியுடன் அவர் சேரும் மூன்றாவது படமாகும்.