கன்னட திரைப்படத் துறையில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் ‘லவ் யூ’ என்ற புதிய திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை நரசிம்ம மூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார்.

நரசிம்ம மூர்த்தி, பெங்களூருவில் உள்ள பாகலகுண்டே ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றுகிறார். வெறும் ரூ.10 லட்சம் மட்டுமே செலவில் உருவான இந்த திரைப்படத்தில், நடிப்பு, இசையமைப்பு, பாடல்கள், பின்னணி இசை, டப்பிங் என அனைத்திலும் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மொத்தம் 95 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ‘லவ் யூ’ திரைப்படம் வரும் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவான திரைப்படமாக இருப்பதால், இது தொடர்பாக திரையுலகிலும், ரசிகர்கள் மத்திலும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.