Touring Talkies
100% Cinema

Saturday, April 19, 2025

Touring Talkies

நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்… அவரது குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

2012-ம் ஆண்டு வெளியான ‘வழக்கு எண் 18/9’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீ. அதன் பின்னர் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘வில் அம்பு’, ‘மாநகரம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

2023-ம் ஆண்டு வெளியாகிய ‘இறுகப் பற்று’ திரைப்படமே அவர் நடித்த கடைசி படம். அதன் பின்னர் அவர் எந்த திரைப்படத்திலும் பங்கேற்காத நிலையில், சமீபத்தில் அவருடைய ஒரு வீடியோ இணையத்தில் வைரலானது. அதில் அவர் மிக மெலிந்த உடல் நிலையுடன் காணப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவர் போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டாரோ என சந்தேகிக்கும் கருத்துகளும் பரவின.

இதனையடுத்து, நடிகர் ஸ்ரீ தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்களின் ஆலோசனையின் பேரில் சமூகவலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகி இருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். ஸ்ரீயின் உடல்நிலை குறித்து சமூகத்தில் பரவும் தவறான தகவல்கள் அவர்கள் மனதிற்கு வேதனையளிப்பதாகவும், இப்படிப்பட்ட தவறான தகவல்களை பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த அறிக்கையை லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News