Touring Talkies
100% Cinema

Monday, April 14, 2025

Touring Talkies

பூங்காவை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘பூங்கா’ திரைப்படம்… என்ன சொல்ல வருகிறது?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அழகு மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கே.பி. தனசேகர் மற்றும் ராமு லட்சுமி இணைந்து தயாரிக்கின்ற திரைப்படம் தான் “பூங்கா”. இப்படத்தை தயாரிப்பாளர் தனசேகரே இயக்குகிறார். கதாநாயகனாக கவுசிக் நடிக்கின்றார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி மற்றும் வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை அசோக் மேற்கொள்கிறார் மற்றும் இசையமைப்பை அகமது விக்கி செய்கிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் தனசேகர் கூறுகையில், ‘பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு படம் அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை. பலவகை மக்கள் ஒன்று கூடும் இடமாக அது அமைந்துள்ளது. சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது எனச் சொல்வார்கள், ஆனால் பூங்கா என்பது பூமியில் உள்ள சொர்க்கம் என்று நான் நினைக்கிறேன்.

ஒரு பூங்காவில் நடக்கும் பல நிகழ்வுகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. நான்கு இளைஞர்கள் தங்களுடைய பிரச்சனைகளுடன் பூங்காவிற்கு வருகிறார்கள். அந்த இடத்தில் அவர்கள் பிரச்சனைகள் தீருமா என்பது தான் கதையின் மையம். இப்படத்தின் முழு கதையும் ஒரே பூங்காவில் நடைபெறுகிறது” என்றார்.

- Advertisement -

Read more

Local News