Touring Talkies
100% Cinema

Saturday, August 2, 2025

Touring Talkies

தவறான வதந்தியால் மன அழுத்தத்திற்கு ஆளான பிரபல சின்னத்திரை நடிகர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் டிவியில் பிரபலமான நடிகர் ஸ்டாலின் முத்து, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றார். தற்போது, அந்த தொடரின் இரண்டாம் சீசனிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வரும் நடிகை மீனா செல்லமுத்துவுடன் ஸ்டாலின் முத்துவிற்கு திருமணம் ஆகிவிட்டதாக புகைப்படங்களும் செய்திகளும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை பார்த்த ரசிகர்கள், இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்க ஆரம்பித்தனர். ஆனால், உண்மையில் அது ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட எதார்த்தமான புகைப்படம் மட்டுமே. இந்த புகைப்படம் காரணமாக தவறான தகவல் பரவியதால், அந்த நடிகை மிகுந்த வருத்தத்துடன் இருந்தார்.

மற்றுமொரு பக்கம், ஸ்டாலின் முத்துவின் குடும்பத்தினரும் இந்த புகைப்படம் குறித்து கேள்விகள் எழுப்பத் தொடங்கினர். இதனால், அவர் மன அழுத்தத்திற்கு ஆளாகி, பத்து நாட்களுக்கு மேல் நிம்மதியாக உணவும் சாப்பிட முடியாமல், தூங்கவும் முடியாமல் மிகவும் கடினமான நேரத்தை எதிர்கொண்டதாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ஸ்டாலின் முத்துவின் சொந்த ஊருக்கு அருகிலுள்ள ஒரு இடத்தில் இருக்கும் யூடியூபர் ஒருவரே இந்த தவறான செய்தியை பரப்பியதாக தெரியவந்தது. இதனால், ஸ்டாலின் முத்து கடுப்பாகி, இனிமேல் தனது புகைப்படங்களை தவறாக பயன்படுத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News