Thursday, February 13, 2025

நடிகர் அஜித் இயக்குனர் நித்திலனுடன் இணைய வாய்ப்பா? தீயாய் பரவும் தகவல்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடித்து வெளியான ‘விடாமுயற்சி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், ஏப்ரல் 10ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் கதையை மையமாக கொண்டு உருவான இப்படத்தை, அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், தற்போது கார் ரேசிங் போட்டிகளில் பங்கேற்று வரும் அஜித், அடுத்ததாக எந்த இயக்குனருடன் இணைகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவ்வேளையில், ‘மகாராஜா’ திரைப்படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன், ஏற்கனவே அஜித்தை சந்தித்து ஒரு கதையை கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், அஜித், “இந்தக் கதையை இன்னும் சிறப்பாக மேம்படுத்துங்கள். கார் ரேஸ் முடிந்து திரும்பியதும், இன்னொரு முறை கேட்டு பிடித்தால், இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன்” என்று கூறியிருப்பதாக கூறப்படுகிறது.மேலும், நித்திலன் சாமிநாதன் இயக்கிய ‘மகாராஜா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, சீன மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு, அதிக வசூல் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News