எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் தலைப்பு மற்றும் இரண்டு போஸ்டர்கள் இரண்டு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டன.அந்த போஸ்டர்களின் அடிப்படையில், இது அரசியல் சார்ந்த கதை கொண்ட படமாக இருக்கும் என உறுதியாகி உள்ளது.
விஜய்யின் கடைசி திரைப்படமாக இருக்கும் என்பதால், ‘ஜனநாயகன்’ படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கான வியாபார பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே தொடங்கி உள்ளன.
தற்போது வெளிநாட்டு உரிமை தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. சுமார் 75 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு உரிமை விற்பனை செய்யப்பட்டதன் மூலம் ஒரு சாதனையாக மாறியுள்ளது. இந்த வியாபாரம் அட்வான்ஸ் முறையில் நடைபெற்றதாக கூறப்படுகிறது.முந்தைய விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் பிசினஸ் சாதனைகளைத் தொடர்ந்து, ‘ஜனநாயகன்’ படத்திற்கும் அதே மாதிரியான வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழக உரிமை மற்றும் பிற மாநில உரிமைகளும் அதிக விலைக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.