Friday, November 1, 2024

என்னிடம் இப்படி கேட்டார்கள்… நீங்களும் ‘நோ’ சொல்லி பழகுங்கள்… நடிகை தனுஷின் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இலங்கை தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக இருந்த தனுஷிக் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “நீ நான் காதலி” தொடரில் அஞ்சலியாக நடித்து பெரும் கவனம் பெற்றுள்ளார். அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் காலத்தில் ஆடிசனில் நேரடியாக அட்ஜெஸ்மென்ட் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியதாக கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: “இலங்கையில் பணியாற்றும்போது, சில மீடியா நண்பர்கள் என்னை அறிமுகப்படுத்தினர். அவர்கள் சென்னை வந்தால் அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறினர். அவர்களை நம்பி சென்னை வந்தேன், ஆனால் என்னை அழைத்தவர்கள் பாதியிலேயே உதவியை நிறுத்திவிட்டனர். எனது தோழியின் வீட்டில் தங்கி வாய்ப்பு தேடினேன். அவள்தான் எனக்கு தங்க இடம், உணவு, ஆடிசனுக்கு செல்ல தேவையான பணம் ஆகியவற்றை வழங்கினாள்.

அதன் பின், எனக்கு “அன்பே வா” சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. “இனியா” தொடரிலும் நடித்தேன். ஜீ தமிழில் “கார்த்திகை தீபம்” தொடரிலும் நடித்தேன். அந்தத் தொடரில் முக்கியமான, ஆனால் நெகட்டிவ் ரோல் கிடைத்தது, அதனால் அந்த கேரக்டர் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு “நீ நான் காதல்” தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது, தற்போது அஞ்சலியாக அனைவரின் மனதில் இடம் பெற்றுள்ளேன். வாய்ப்பு தேடும் போது நேரடியாகவே அட்ஜெஸ்மென்ட் பற்றி கேட்டிருந்தனர். 20 ஆடிசன்களில் 5 ஆடிசன்களில் இது நடந்தது. நான் நிச்சயம் “இல்லை” என முடிவெடுத்து வந்தேன். நடிகைகளுக்கு என்னிடம் சொல்ல விரும்பியது, கடின உழைப்பும் உங்களை மீதமுள்ள நம்பிக்கையும் போதும், “நோ” சொல்லிப் பழகுங்கள்,” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News