பி எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம், ‘சர்தார்.இதில் ராஷிகன்னா, ரஜிஷா விஜயன், லைலா உட்பட பலர் நடித்தனர். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் அடுத்தப் பாகம் ‘சர்தார் 2’ என்ற பெயரில் உருவாகிறது. எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடிக்கும் இதில் முதல் பாகத்தில் நடித்த நடிகைகள் இல்லை என்று கூறப்படுகிறது. நடிகைகள் மாளவிகா மோகனன், பிரியங்கா மோகன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கலாம் என்கிறார்கள். முக்கிய வேடத்தில் தெலுங்கு நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000047079-813x1024.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000047078-820x1024.jpg)
![](https://touringtalkies.co/wp-content/uploads/2024/07/1000047076-729x1024.jpg)