Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

ஷங்கரின் கேம் சேன்ஜர் ரிலீஸ் எப்போது தெரியுமா? அப்டேட் சொன்ன தயாரிப்பாளர் தில் ராஜூ! #GameChanger

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் சரண். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்திற்கு கதையை எழுதியுள்ளார்.

இப்படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, நாசர் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இந்த படத்திற்கு இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை திருநாவுக்கரசு மேற்கொள்ள, தில் ராஜூ தயாரித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் “ஜரகண்டி” என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. இப்பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் வெளியாகியது.

தற்போது ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜு, ஹைதராபாத்தில் நடைப்பெற்ற தனுஷின் ராயன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என கூறியுள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News