மஞ்சு வாரியர் மற்றும் மலையாள நடிகர் திலீப் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் பின்னர் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இந்நிலையில் அவர்களது மகள் மீனாட்சி அப்பா உடன் அதாவது திலீப்புடன் சென்றுவிட்டார். தற்போது மீனாட்சி திலீப் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் படித்து மருத்துவராகியுள்ளார். மகள் பட்டம் பெற்ற புகைப்படத்தினை நடிகர் திலீப் பகிர்ந்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் தனது மகள் பட்டம் பெற்ற பின்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினைப் பகிர்ந்த திலீப் அதில், ” கடவுளுக்கு நன்றி. கனவு நனவாகிவிட்டது. எனது மகள் மீனாட்சி மருத்துவர் ஆகிவிட்டார். எனது மகள் மீது அன்பும் மரியாதையும் கூடுகின்றது” என பொருள்படும் படி எழுதியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் மட்டும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
Share
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
- Advertisement -
Read more