Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

கூலி படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போகிறதா? காரணம் இதுதானாம்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் முடிந்து படம் அக்டோபர் மாதத்தில் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்குப் பின்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கூலி படத்தில் இணையயுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதம் 10ஆம் தேதி துவங்கும் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.

ஆனால் சில முன் தயாரிப்பு பணிகள் இன்னும் முடியாததால், படத்தின் ஷூட்டிங் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் துவங்கும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ப்ரமோ முன்னதாக வெளியாகி அசத்தலான வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், படத்தின் வெளியீட்டில் முடிவில் மாற்றம் ஏற்படுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். கூலி படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் பல படங்களில் இணைவார் என்று கூறப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மேலும் ஒரு படம் அவர் நடிக்க உள்ளதாகவும், வேல்ஸ் நிறுவனத்திற்காகவும் அவர் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க 250 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News