பாலிவுட் சினிமாவில் வித்தியாசமான மாறுபட்ட கருத்துக்கள் கொண்ட படங்களை உருவாக்கும் இயக்குனர்களில் அனுராக் காஷ்யப் முக்கியமானவர். அவர் இயக்கும் படங்கள் எப்போதும் தனித்துவமான கதைகளை கொண்டிருக்கும், மேலும் சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்திருக்கும். கடந்த ஆண்டு வெளியான ‘லியோ’ படத்தில் அவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அவரது அடுத்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் பாபி தியால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன்யா மல்ஹோத்ரா அவருடன் இணைந்து நடிக்கவுள்ளார். மேலும், ஜோஜு ஜார்ஜ் மற்றும் சபா அசாத் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றவுள்ளனர். இது ஒரு திரில்லர் வகை படமாக உருவாகிறது.
சன்யா மல்ஹோத்ரா ‘லவ் ஹாஸ்டல்’ படத்திற்கு பிறகு பாபி தியாலுடன் மீண்டும் இணைகின்றார். மலையாள சினிமாவில் புகழ்பெற்ற ஜோஜு ஜார்ஜ் இப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாகிறார். இப்படத்தை நிகில் திவேதி தயாரிக்க, இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.