Touring Talkies
100% Cinema

Thursday, May 15, 2025

Touring Talkies

துருவ் விக்ரமின் ‘பைசன்’ ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த ஆண்டு மாமன்னன் திரைப்படத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்ற மாரி செல்வராஜ் இப்படத்தைத் தொடர்ந்து ‘வாழை’ என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கிவந்தார். குழந்தைகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் கலையரசன், திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்துக்கு ‘பைசன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இதில் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார்.இப்படத்தை அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இந்த ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரில் மிகப்பெரிய காளை சிலைக்கு முன்னால் நாயகன் துருவ் விக்ரம் அமர்ந்திருப்பது போல் காணப்படுகிறார்.இப்படத்தில் கபடி வீரராக துருவ் விக்ரம் நடிக்க போகிறார் என கூறப்படுகிறது.இதற்கான படப்பிடிப்பு பூஜையும் படப்பிடிப்பும் ஆரம்பமாகி உள்ளது.இதில் விக்ரம் , துருவ் விக்ரம், இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் பா ரஞ்சித் உள்ளிட்ட பலர் கலைந்துகொண்டனர்.

- Advertisement -

Read more

Local News