Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

பாட்ஷா படத்தில் பஸ் ஆட்டோவாக மாறிய கதை… வேறொரு பட காலேக்ஷன் கண்டு மிரண்டு போன ரஜினி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஜினி சூப்பர் ஸ்டார் ஹீரோவாக இருந்த போதும் அவரது படம் நஷ்டத்தையும் அப்போது சந்தித்திருந்த‌ நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.1993-ஆம் ஆண்டில் ஆர்.பி. உதயகுமார் இயக்கத்தில், ரஜினி, மீனா உள்ளிட்டோர் நடித்த ‘எஜமான்’ படம் வெளியானது. இந்தப் படம் தியேட்டரில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருந்தது.

அப்போது திருவண்ணாமலை தியேட்டர் உரிமையாளரை ரஜினி அழைத்துப் பேசினார்.அதாவது படம் எவ்வளவு கலெக்ஷன் போய்க் கொண்டிருக்கிறது என்பதை கேட்டிருக்கிறார்.ஒரு கோடி ரூபாய்க்கு வாங்கிய படம் இதுவரை 10 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளது. இன்னும் சில வாரங்களில் 20 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கும் என்று தியேட்டர் உரிமையாளர் கூறினார்.

வேறு என்னென்ன படங்கள் தியேட்டரில் ஓடுகிறது என்று ரஜினி கேட்டுள்ளார். நாசர், வடிவேலு, கோவை சரளா ஆகியோர் நடிப்பில் உருவான வரவு எட்டணா செலவு பத்தணா படம் ஓடிக்கொண்டிருக்கிறது என்ன சொல்லி உள்ளார்.

அதோடு 20 லட்சம் போட்டு ஒரு கோடி வரை கிடைச்சிருக்கு என்று தியேட்டர் ஓனர் கூறினார். இதைக் கேட்டு ரஜினியே மிரண்டு போய் விட்டாராம். குறிப்பாக ஆட்டோக்காரனாக வடிவேலு நடித்த ரோல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் ஓடும்போது தியேட்டர் வாசலில் இருவதற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிற்குமாம். இதனால் தான் அடுத்ததாக பாட்ஷா படத்தில் மாணிக்கம் கதாபாத்திரத்தில் ஆட்டோக்காரனாக ரஜினி நடித்தார் என்பதை இயக்குனர் வி சேகர் கூறியிருக்கிறார்.

ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது நம்ப முடியாத விஷயமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் 1993இல் பிப்ரவரி மாதம் எஜமான் படம் வெளியான நிலையில் அடுத்த வருடம் 1994 இல் ஏப்ரல் மாதம் தான் வரவு எட்டணா செலவு பத்தணா படம் வெளியானது.

அதோடு பாட்ஷா படத்தில் முதலில் ரஜினியை பஸ் கண்டக்டராக நடிக்க வைக்க தான் சுரேஷ் கிருஷ்ணா முயற்சி செய்துள்ளார். ஆனால் பஸ்ஸை வைத்து எடுப்பதில் சிரமம் இருந்ததால் அதன் பின்பு ஆட்டோவே இருக்கட்டும் என மாற்றப்பட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News