சினிமாவுலகில் 1999 ஆம் ஆண்டு மலையாள நடிகர் மம்மூட்டியை வைத்து எதிரும் புதிரும் எனற படத்தை இயக்கி அறிமுகமானவர் தான் இயக்குனர் தரணி. அதன் பின்னர் விக்ரமை வைத்து தில் என்ற படத்தை இயக்கி ரசிகர்கள் வரவேற்பைப் பெற்றார்.தில் வெற்றியை தொடர்ந்து தூள் என்ற ஹிட் படத்தை ரசிகர்களுக்கு கொடுத்து மகிழ்வித்தார் இயக்குனர் தரணி.
தொடர் வெற்றிகளை கொடுத்த அடுத்தடுத்து தரணியை மிஸ் செய்ய கூடாது என நினைத்த விஜய் 2004ல் ஆண்டு கில்லி படத்தை இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுக்க மகேஷ்பாபு நடிப்பில் தெலுங்கில் வெளியான ஒக்கடு என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக கில்லி படத்தை இயக்குனர் தரணி ரசிகர்ளுக்கு விருந்தாக படைத்தார்.
மவிஜய், திரிஷா நடித்து தரணி இயக்கத்தில் வெளியான கில்லி படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் தற்போது ரீ ரிலீசான கில்லி திரைப்படம் இதுவரை 18.5 கோடி ரூபாய் வரை வசூலை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியான உள்ளன.விரைவில் 20 கோடி ரூபாய் வசூலை கில்லி படம் எட்டும் என கூறப்படுகிறது.
நேற்றைய தினம் இயக்குநர் தரணி நேற்று தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னமுடன் இணைந்து சூப்பர் ஹிட்டான கில்லி படத்தின் ரீ ரிலீஸ் கொண்டாடும் விதமாக நடிகர் விஜய்யை கோட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து மாலை அணிவித்து நன்றி தெரிவித்த காட்சிகள் வெளியாகின.
அதேசமயம் 20ஆண்டுகளுக்கு முன்பு தளபதி விஜய் இயக்குநர் தரணிக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் தற்போது இயக்குனர் தரணிக்கு நடிகர் விஜய் சால்வை போர்த்திய புகைப்படத்தையும் ஒன்றாக சேர்த்து இதுதான் 20இயர்ஸ் ரியல் சேலன்ஜ் என வைரல் ஆக்கி வருகின்றனர்.