ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘மதயானை கூட்டம்’ படத்தில் அறிமுகமாகி பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகர் வேலராமமூர்த்தி, நடிகர் விஜய்சேதுபதியின் வளர்ச்சி மாற்றம் குறித்து ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.

‘சங்குதேவன்’ தெருக்கூத்து கலைஞர், செவ்வாய் தோழம் என்று ஒரு அருமையான கதை. அதுல தெரு கூத்துக்கலைஞன் என்றதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், அப்போது அந்தப் படத்தோட இயக்குநர் சுதாகருக்கும் விஜய்சேதுபதிக்கும் இடையே பிரச்சனை வந்துவிட்டது. அதனால், அவர் எடுத்த காட்சியையே திரும்ப திரும்ப எடுத்து படம் ட்ராப் ஆயிடுச்சு.
அப்போது இருந்த விஜய்சேதுபதி வேற. ஆனால், அவர் ‘சேதுபதி’ படத்தில் நடிக்க வரும் போது அதைவிட வேறு சேதுபதி. உருமாற்றம், குண மாற்றம் என்று காரல் மார்க்ஸ் சொல்லுவாரே அதுபோல விஜய்சேதுபதி மாறி இருந்தார்.
மேலும் அந்தப் பேட்டியை முழுமையாக தெரிந்து கொள்ள கீழே உள்ள காணொளியை கிளிக் செய்து பாருங்க.