தென்னிந்திய மொழிப் படங்களை தொடர்ந்து இந்தியிலும் நடித்து வருகிறார், ஜோதிகா. கடந்த 1998 ஆம் ஆண்டு ‘டோலி சஜா கே ரக்னா’ என்ற இந்திப் படத்தில் நடித்திருந்த ஜோதிகா, இருபத்தி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ‘சைத்தான்’ என்ற இந்திப் படத்தில் நடித்தார்.
விகாஸ் பால் இயக்கத்தில் அஜய் தேவ்கான், மாதவன், ஜோதிகா நடிப்பில் திரைக்கு வந்த இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து மாற்றுத்திறனாளி தொழிலதிபரான ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஜோதிகா நடித்தார்.
தொழிலதிபர் வேடத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்க இன்னொரு முக்கியமான பாத்திரத்தில் ஜோதிகா நடித்திருக்கிறார். முதலில் இந்தப் படத்திற்கு ‘ஸ்ரீ’ என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால், திடீரென்று ‘ஸ்ரீகாந்த்’ என்று பெயர் மாற்றப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த மாதம் பத்தாம் தேதி இந்தி உட்பட பல மொழிகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தை துஷார் இயக்கி உள்ளார்