போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக டோலிவுட்டில் தேவாரா படத்தில் நடித்து வருகிறார்.
மராத்தியில் ஜாதிய படுகொலையை மையமாக வைத்து வெளியாகி இந்தியாவையே உலுக்கிய சைரத் படத்தின் இந்தி ரீமேக்கான தடக் படத்தின் மூலம் 2018ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான வாரிசு நடிகை தான் ஜான்வி கபூர். 26 வயதாகும் இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்பவே 23.2 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர்.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாக லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு மில்லியன் கணக்கில் லைக்குகளையும் ஹார்ட்டீன் மற்றும் ஃபயர் எமோஜிக்களையும் அள்ளி வருகிறார்.
உடம்பை ஒட்டிய ஆடையில் ஜான்வி கபூர் வெளியிட்டு அசத்தி இருக்கிறார்.