Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

இளையராஜா இசையில் ’மைலாஞ்சி’பிப்ரவரி முதல் திரையில்…

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ந்த இருபது வருடங்களாகத் திரைத்துறையில், திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் எனப் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வருபவர் அஜயன் பாலா.
2017 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஆறு அத்தியாயம்’ திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கியவர்.

இவர், தற்போது முழு நீளத் திரைப்படம் ஒன்றை முதல் முறையாக எழுதி மைலாஞ்சி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ‘கன்னிமாடம்’ படத்தில் நடித்துள்ள ஸ்ரீராம் கார்த்திக் இயற்கைப் புகைப்படக் கலைஞர் வேடத்தில் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில், ‘கோலிசோடா 2′ புகழ் கிரிஷா குருப் நாயகியாக, முனீஷ்காந்த் மற்றும் தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படம் முழுவதும் வரும் ஒரு முக்கிய பாத்திரத்தில் சிங்கம்புலி நடிக்கிறார்.

இந்தப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க செழியன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத். லால்குடி இளையராஜா கலை இயக்கத்தைக் கையாண்டுள்ளார்.

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் அர்ஜுன் வழங்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இப்படத்தின் தலைப்பு மாற்றம் மற்றும் படம் குறித்து அஜயன் பாலா கூறியதாவது…..

திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம். இந்த நடைமுறையில் உள்ள சில சிக்கல்களின் காரணமாகவே பத்து வருடங்களுக்கு முன் பதிவு செய்திருந்தும் இதே தலைப்பில் வேறு ஒரு படம் திரைக்கு வந்துவிட்டது.அதனால், எங்கள் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

மலைப் பிரதேசத்தைப் பின்னணியாகக் கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்துப் பேசும் அழகான காதல் கதையாக உருவாகியுள்ளது என்றார். செழியனின் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும். காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

Read more

Local News