பிக்பாஸ் நிகழ்ச்சியில், கதை சொல்லி அனைவரையும் கவர்ந்தார் பவா செல்லதுரை. ஆனால், “கதை சொல்லிட்டு அவர் பாட்டுக்கும் ஒரு ஓரமா தூங்கப் போயிடுறாரு, யாருக்குமே உதவியா இல்லை, அவருக்கு வயசானதால அவர் இந்த வீட்டில் இருக்க வேண்டாம்” என்று இதர போட்டியாளர்கள் பலர் கூற ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஆனால், முதல் வார கேப்டனான விஜய் வர்மா, “பவா சார் முதல் இரண்டு நாள் தான் அமைதியாக இருந்தார். அதன் பின்னர் வேலைகளை செய்ய ஆரம்பித்து விட்டார். பாத்திரங்கள் எல்லாம் கழுவினார். தொடர்ந்து வேலைகளை செய்ய இறங்கி வருகிறார்” என்று பாராட்டி இருந்தார்.
ஆனாலும் பவாவுக்கு சிக்கல்தான் என நினைக்கிறார்கள் நேயர்கள்.