Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

த்ரிஷாவின் ‘தி ரோட்’: ரிலீஸ் எப்போது?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அருண் வசீகரன் இயக்கத்தில் திரிஷா நடித்துள்ள படம் ‘தி ரோட்’. மேலும்  சந்தோஷ் பிரதாப், ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கடந்த 2000-ஆம் ஆண்டின் துவக்கத்தில் மதுரையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘தி ரோட்’ திரைப்படம் வருகிற அக்டோபர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

- Advertisement -

Read more

Local News