கேலக்சி பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிக்க, உதய் கார்த்திக் , ரிஷி, மாறா, ஜானகி சுரேஷ், யாமினி சந்தர், சாய் பிரியா தேவா, மானக்ஷா , அருண், தாரா சீலன் நடிப்பில் எம் ஆர் மாதவன் எழுதி பாடல்களும் எழுதி இயக்கி இருக்கும் படம் டை நோ.
பெண் பார்க்க போகும் இளைஞன், அந்தப் பெண் தன் நண்பனை விரும்புதை அறிந்து விட்டுக்கொடுக்கிறான். அந்த அளவுக்கு உயிர் நட்பு.
இந்த இருவரும் ஒரு தாதாவின் அடியாட்களாக செயல்படுகிறார்கள். அந்த தாதாவின் மைத்துனனை கொன்ற வழக்கில் இரு நண்பர்களில் ஒருவன் சிக்கியிருக்கிறான்.
அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் கதை.
இந்தக் கதைக்கான களத்தை சிறப்பாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.ஆர். மாதவன் . சிறு சிறு கதாபாத்திரங்களுக்கும் உரிய முக்கியத்துவம் தந்திருக்கிறார்.
ஜோன்ஸ் வி ஆனந்தின் ஒளிப்பதவும் சிறப்பு.
உதய் கார்த்திக் றார் மாறா ரிஷி சிறப்பான நடிப்பு. முக பாவனைகளில் ஈர்க்கிறார் யாமினி சந்தர்.
எதிரி தாதா கிளியப்பனாக நடித்து இருக்கும் பாபு பயப்பட வைக்கிறார் . படத்தில் வரும் திருப்பங்கள் ரசிக்க வைக்கின்றன. மொத்தத்தில் மிரட்டலான படம்.