நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘காவாலா’ பாடல் நேற்று முன்தினம் வெளியானது.
அனிருத் இசையில் அருண் ராஜா காமராஜ் எழுத, ஷில்பா ராவ், அனிருத் இணைந்து பாடியுள்ளனர். தமிழும், தெலுங்கும் கலந்து எழுதப்பட்டுள்ளது. ஜாலியான துள்ளல் இசைப் பாடலாக உருவாகியிருக்கும் பாடலின் வரிகள் பெரிதாக பிடிபடவில்லை. ‘வா நு காவாலயா’ வரி மட்டும் கவனம் பெறுகிறது. பாடலின் இடையிடையே வரும் புல்லாங்குழல் இசை ஈர்க்கிறது. மொத்தத்தில் பாடல் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது
இந்நிலையில் இரண்டாவது நாளிலேயே ஒரு கோடியே இருபது லட்சம் வியூவர்ஸை நெருங்கி சாதனை படைத்துள்ளது பாடல்.