நடிகர் ராம்சரண்-உபாசனா தம்பதிக்கு கடந்த மாதம், அழகான பெண் குழந்தை பிறந்தது. சில நாட்களுக்கு முன்பு குழந்தையின் பெயர் சூட்டும் விழா உபசமாவின் தாய் வீட்டில் நடந்தது.
ராம்சரண்-உபாசனாவின் பெற்றோர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தார்கள். குழந்தைக்கு க்ளின் காரா கொனிடேலா என்ற பெயர் வைக்கப்பட்டது. இந்த பெயர் இந்து மதத்தில் உள்ள புனித மந்திரமான லலிதா சஹஸ்ரநாமம் ஆகும். இதில் ‘க்ளின் காரா’ என்பதற்கு `ஆன்மிக விழிப்புணர்வைக் கொண்டுவரும் மாற்றும் மற்றும் தூய்மைப்படுத்தும் ஆற்றல்’ என்று அர்த்தம்.
இந்த நிலையில் இந்தியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி அவருடைய மனைவி நீட்டா அம்பானி ஆகியோர் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத் தொட்டிலை பரிசாக ராம்சரண்- உபசனாவின் குழந்தைக்கு கொடுத்திருக்கிறார்கள். அந்த சிறிய தங்கத் தொட்டிலில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புகைப்படம் தான் இணையத்தில் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது.