Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

விமர்சனம்: நாயாடி

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஆதர்ஷ் மதிகாந்தம் தயாரித்து, இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் நாயாடி. ஹீரோயினாக காதம்பரி, பிரபல யூடியூபர் ஃபேபி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். அருண் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கேரளாவின் மிகவும் பிற்படுத்தப்பட்ட பழங்குடி இனத்தவரான நாயாடிகள் குறித்த வரலாறோடு இப்படம் தொடங்குகிறது. அடிமைகளாக இருந்த அம்மக்கள் மனிதர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் தங்களை பாதுகாத்துக் கொள்ள பில்லி சூனியம் உள்ளிட்ட மாந்தீரிகங்களை கற்றுக்கொள்கின்றனர். இதனிடையே யூட்யூப் சேனல் நடத்தும் ஆதர்ஷ் மதிகாந்தம், காதம்பரி, ஃபேபி உள்ளிட்ட 6 பேர் கொண்ட நண்பர்கள் குழு அசைன்மெண்ட் வருகிறது.

கேரளாவில் இடம் ஒன்றை வாங்கியுள்ள நபர் அங்கு நாயாடி மக்களின் அமானுஷ்யம் இருப்பதாக கூறுகிறார். இதுதொடர்பாக மக்களை நம்ப வைக்கும் வகையில் வீடியோ எடுத்து தருமாறு கேட்கிறார். பணத்துக்கு ஆசைப்பட்டு அங்கு செல்லும் குழுவினருக்கு பலவித அமானுஷ்யங்கள் நடக்கிறது. இதிலிருந்து தப்பிக்க முயற்சிக்கையில் 3 பேர் கொல்லப்படுகின்றனர்.

பிறகு என்ன நடந்தது என்பதுதான் கதை.

அமானுஷ்யம்..  த்ரில்லர் படங்களில்  ஆரம்பத்திலேயே கதையோடு ஆடியன்ஸை ஒன்ற வைக்க வேண்டும்.  இதில் அது மிஸ்ஸிங்.

படத்தில் இடம்பெற்றவர்கள் இன்னும் நடிப்பில் மெருகேற்றி இருக்கலாம். நாடகத்தனமாக இருக்கிறது.

அதே நேரம் இதுவரை திரையில் சொல்லப்படாத நாயாடி மக்கள் பற்றிய கதையை  சொன்னதற்காக இயக்குநர் ஆதர்ஷ் மதிகாந்தத்தை பாராட்டலாம்.

 

- Advertisement -

Read more

Local News