வசந்த் ரவி, சரஸ் மேனன், முரளிதரன் , உதயாதீப் உள்ளிட்ட யூடியூப் சேனல் நடத்தும் ஐவர் குழு லண்டன் அருகே தனித்த தீவில் உள்ள பாழடைந்த மாளிகைக்கு செல்கிறது. ஏற்கெனவேஅங்கே தங்கி இருந்து அமானுஷ்யங்கள் பற்றி ஆராய்ந்த ஆர்த்தி என்பவரும் அவருடன் இருந்த 15 பேரும் அகால மரணம் அடைய, ஆர்த்தியும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
அங்கே இந்த குழு என்ன செய்தது.. என்ன நடந்தது என்பதுதான் கதை.அமானுஷ்ய படங்களை விரும்பி ஏற்று நடிக்கும் வசந்த் ரவி, இதிலும் நடித்து இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் உடன் வந்த நால்வருமே கொல்லப்பட்டதாகத் தெரியவர அப்படி அவர்களைக் கொன்றதும் தானேதான் என்று ஒளிப்பதிவான காட்சிகள் மூலம் அறிந்து அவர் திடுக்கிடுவது நம்மையும் திடுக்கிட வைக்கிறது.
கடைசியில் நண்பர்கள் உயிரை மீட்க அவர் மேற்கொள்ள முயற்சிக்கிறார்.
அவருடன் நடித்த நால்வரும் அவரவர் பங்கை செய்திருக்கிறார்கள்.
படத்தின் ஹீரோ ஒலிப்பதிவுதான். அங்கங்கே நம்மை தூக்கி வாரிப் போடச் செய்வது மட்டுமல்லாமல் படத்துக்குள் நம்மை பயணிக்க வைப்பதும் ஒலிக்கலவைகளின் வேலைதான். விஜய் சித்தார்த்தின் மிரட்டலான பின்னணி இசையும் சிறப்பு.
கதையைப் புரிந்துகொண்டு அதனுடன் பயணப்படுவதுதான் பெரும் சவால்.