மலையாளத்தில் வெளிவந்த சார்லஸ் எண்டர்பிரைசஸ், அதே பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் வந்திருக்கிறது.
கணவரை பிரிந்து தனியே வந்த கோமதி ( ஊர்வசி ) தனது மகனுடன் தனியாக வாழ்ந்துவருகிறார், கோமதியின் மகன் ரவிக்கு கண்ணில் ஒரு பிரச்சனை இருக்கிறது, அவருக்கு தனியாக தோழில் தொடங்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. கோமதிக்கு தெய்வபக்தி அதிகம் அதனால் அவரின் வீட்டில் விநாயகர் சிலை ஒன்றை வைத்து வழிபட்டுவருகிறார்.
கோமதி வீட்டில் இருக்கும் விநாயகர் சிலையை பர்வதம் என்ற பெண் பணத்திற்கு கேட்கிறார் , எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாக ரவியிடம் சொல்கிறார், ஆனால் கோமதிக்கு இந்த விநாயகர் சிலையை வைத்து ஒரு கோவில் கட்டவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
கடைசியில் ரவி விநாயகர் சிலையை விற்று கண் பிரச்சனையை தீர்த்து , தொழில் தொடங்கினாரா கோமதி அந்த சிலையை வைத்து கோவில் கட்டினாரா என்பதே மீதி கதை.
ஊர்வசி, குருசோமசுந்தரம் உள்ளிட்டோர் இயல்பாக நடித்து உள்ளனர். கேமரா, இசை குறித்து குறிப்பிட்டு சொல்லும்படி ஏதுமில்லை.சுவாரசியமற்ற திரைக்கதை காரணமாக, படத்தை ரசிக்க முடியவில்லை.