Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

விமர்சனம்: 1982 அன்பரசின் காதல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கேரள எல்லையோரம் வசிக்கும் தமிழக இளைஞரான ஆஷிக் மெர்லினுக்கு, மலையாள பெண் சந்தனா மீது காதல். ஆனாலும் மூன்று வருடமாக காதலை வெளிப்படுத்தாமலே இருக்கிறார்.

இந்த நிலையில் ஆஷிக் மெர்லினை சந்தனா போனில் தொடர்பு கொண்டு தன்னை ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்லும்படி கூறுகிறார். ஆஷிக் மெர்லினும் கேரளா சென்று சந்தனாவை அழைத்துக் கொண்டு மலைக்காடுகள் வழியாக பயணிக்கும்போது ரவுடிகள் மறிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து தப்பி ஓடுகின்றனர்.

உல்லாஷ் சங்கர் இருவரையும் காப்பாற்றி தனது இருப்பிடத்துக்கு அழைத்து செல்கிறார். அங்கு அவர்களை உல்லாஷ் சங்கர் முறைத்து பார்க்க பயந்து மீண்டும் தப்பி ஓடுகிறார்கள். அவர்களை விடாது உல்லாஷ் துரத்துகிறார். அவரிடம் இருவரும் சிக்கினார்களா? காதல் என்ன ஆனது? உல்லாஷ் சங்கர் யார்? என்பது மீதி கதை.

ஆஷிக் மெர்லின் காதல் உணர்வுகளை கச்சிதமாக வெளிப்படுத்தும் இளம் காதலனாக துறுதுறுவென வருகிறார். காதலி நினைவாக நிலைமறந்து இருப்பது, போன் அழைப்புக்காக காத்திருப்பது என்று காதல் தவிப்புகளை வெளிப்படுத்துகிறார்.

சந்தனா அழகும் கவர்ச்சியுமாய் வசீகரிக்கிறார். இன்னொரு நாயகனாக வரும் அமல் ரவீந்திரன் கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார். அவரது காதலியாக வரும் அருணிமா ராஜ் சிரிப்பிலும் நடிப்பிலும் அம்சம்.

உல்லாஷ் சங்கர் காதல் ஜோடியை விரட்டும்போது வில்லத்தனத்தில் பயமுறுத்துகிறார். பிளாஷ்பேக்கில் இன்னொரு முகம் காட்டுகிறார். ஹரிஷ் சிவப்பிரகாசம், செல்வா, சுமதி தாஸ், தமிழன் ஆகியோரும் கதாபாத்திரத்தில் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

சிந்தாமணி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். செபாஸ்டியன் கேமரா மலை பிரதேசத்தின் அழகை அள்ளியுள்ளது. இரண்டு வெவ்வேறு காதல் கதையை திகில் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக காட்சிப்படுத்தி கவனிக்க வைக்கிறார் இயக்குனர் உல்லாஷ் ஷங்கர்.

- Advertisement -

Read more

Local News